Pages

Monday, November 11, 2013

நாட்டின் குடிவரவு சட்டங்களை மீறிச் செயற்பட்ட காரணத்தினால் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறப்பினர்கள் நாடு கடத்தப்பட்டனர் இலங்கை வெளிவிவகார அமைச்சு!

Monday, November 11, 2013
இலங்கை::நாட்டின் குடிவரவு சட்டங்களை மீறிச் செயற்பட்ட காரணத்தினால் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறப்பினர்கள் நாடு கடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் லீ ரியான்னன் மற்றும் நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொகீ ஆகியோர் சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்ததாகத் தெரிவித்துள்ளது.

சுற்றுலா வீசாக்கள் சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுவதாகவும் அந்த வீசாவைப் பயன்படுத்தி நாட்டுக்குள் பிரவேசித்து வேறும் பணிகளில் ஈடுபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வீசா சட்டங்களை மீறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்த ஏற்பாடு செய்திருந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
 

No comments:

Post a Comment