Monday, November 4, 2013

சென்னைக்கு தங்கம் கடத்துவதற்கு முற்பட்ட இந்திய பிரஜைகள் கட்டுநாக்க விமானநிலைய சுங்கப் பிரிவினரால் கைது!

Monday, November 04, 2013
இலங்கை::சென்னைக்கு தங்கம் கடத்துவதற்கு முற்பட்ட இந்திய பிரஜைகள் கட்டுநாக்க விமானநிலைய சுங்கப் பிரிவினரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இவர்கள் தமது காலணிகளில் சூட்சுமமான முறையில் மறைத்து 4 தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும், சுங்க அத்தியட்சகருமான லெஸ்லி காமினி தெரிவித்தார்.
 
இவர்கள் 227 கிரோம் எடையுடைய சுமார் 11 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முற்பட்டுள்ளனர்.
 
45 மற்றும் 42 வயதுடைய இந்த இந்திய பிரஜைகள் இருவரும் அடிக்கடி நாட்டிற்கு வந்து செல்கின்றமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்க ஊடகப் போச்சாளர் மேலும் தெரிவித்தார். 

No comments:

Post a Comment