Pages

Thursday, October 10, 2013

கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிப்பதாக பொதுநலவாய நாடுகள் செயலகம் அறிவித்துள்ளது!

Thursday, October 10, 2013
இலங்கை::கனடாவின் தீர்மானம் ஏமாற்றமளிப்பதாக பொதுநலவாய நாடுகள் செயலகம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கனடாவின் பங்கேற்பு குறித்த தீர்மானம் ஏமாற்றமளிப்பதாக பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பேச்சாளர் ரிச்சர்ட் உக்கு தெரிவித்துள்ளார்.
 
அமர்வுகளில் எவ்வாறான பிரதிநிதித்துவத்தை செய்ய வேண்டும் என்பதனை உறுப்பு நாடுகளே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகளில் ஒன்றாக கனடா திகழ்கின்றது எனவும், பல்வேறு ஆக்கபூர்வமான பங்களிப்புக்களை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை, நல்லாட்சி மற்றும் நல்லிணக்கம் ஆகிய விவகாரங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
மனித உரிமை விவகாரங்களில் மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment