Pages

Thursday, October 10, 2013

இலங்கை இந்திய உறவுகளை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சீ: தினேஷ் குணவர்தன!

Thursday, October 10, 2013
இலங்கை::இலங்கை இந்திய உறவுகளை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சித முயற்சித்து வருவதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
 
சில கடும்போக்குவாத அமைப்புக்கள் இருதரப்பு உறவுகளை சீர்குலைப்பத்தில் நாட்டம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிகவும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தைச் சேர்ந்த சிலர் உள்ளிட்ட பல தரப்பினர் இரு தரப்பு உறவுகளை சீர்குலைப்பதற்கு முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்திய மத்திய அசராங்கத்தின்  கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் காணப்படும் இலங்கை நிறுவனங்களுக்கு இந்திய அரசாங்கம் போதியளவு பாதுகாப்பு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
கடந்த கால தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலும் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
 

No comments:

Post a Comment