Pages

Thursday, October 10, 2013

இராணுவத் தினர் சிறந்த முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் பயனாக 25 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் வட மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது: தினேஷ் குணவர்தன!

Thursday, October 10, 2013
இலங்கை::வடக்கில் நீதியானதும் சுதந்திர மானதுமான தேர்தல் ஒன்றை நடத்தி முடிப்பதற்கு இராணுவமே காரணமாக இருந்தது. அவர்கள் உரிய முறையில் பாதுகாப்பு வழங்கியதன் மூலமே வெற்றிகரமாக தேர்தல் நடத்த முடிந்தது. என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாய் மூல விடைக்காக ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. திருமதி தலதா அதுகோரல நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவிக்கையில் :-டக்கில் இராணுவத்தின் பிரசன்னம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டன. என்றாலும் இராணுவத் தினர் சிறந்த முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.  இதன் பயனாக 25 வருடங்களுக்கு பிறகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வட மாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவுற்றாலும் நாட்டின் பாதுகாப்பை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இராணுவத்தைச் சார்ந்தது. அதனை இராணுவம் தொடர்ந் தும் சிறந்த முறையில் முன்னெடுத்து வருகிறது என்றாலும் இராணுவத்திற்கான சலுகைகள் எதையும் நிறுத்த முடியாது. முன்னைய காலப் பகுதியில் புலிகளுக்கு திறைசேரியிலிருந்து காசோலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால் இது அவ்வாறானது அல்ல. பாடையினர் தமது கடமை களை சிறந்த முறையில் நிறைவேற்ற தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.  அரச திணைக் களங்கள் அனைத்துக்கும் உள்ள சலுகையின் கீழே இதுவும் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ சட்டத்தின் பிரகாரம் சில பதவி நிலை களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிடின் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார். எவர் தவறு செய்தாலும் அவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். அதில் எந்த பாரபட்சங்களும் காட்டப்பட மாட்டாது என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment