Pages

Thursday, October 10, 2013

குடியுரிமை கேட்க இலங்கை தமிழர்களுக்கு தடையாக உள்ள சட்ட பிரிவுகளை எதிர்த்து வழக்கு: மத்திய அரசுக்கு 'நோட்டீஸ்!

Thursday, October 10, 2013
சென்னை::தமிழகத்தில் வசிக்கும், இலங்கை தமிழர்கள், இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க, தடையாக இருக்கும் சட்டப் பிரிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்க, மத்திய அரசு தரப்பில், 'நோட்டீஸ்' பெறப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் அருள்மொழி மாறன் என்பவர், தாக்கல் செய்த மனு: தமிழகத்தில், இலங்கை தமிழர்கள், ஒரு லட்சம் பேர், அகதிகளாக வாழ்கின்றனர். இவர்களில், 70 ஆயிரம் பேர், 113, முகாம்களில் வசிக்கின்றனர்; 35 ஆயிரம் பேர், முகாம்களுக்கு வெளியில் வசிக்கின்றனர். கடந்த, 30 ஆண்டுகளாக, தமிழகத்தில் இலங்கை தமிழர்கள் குடியேறி விட்டனர். அவர்கள் குடும்பமாக வசித்து, அவர்களின் வாரிசுகளுக்கு இங்கே திருமணம் செய்து கொடுத்து, குழந்தைகளும் பெற்றுள்ளனர்.
 
சட்ட விரோத குடியேற்றத்தை கண்டறியும் சட்டம், 1983ல் கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை, சுப்ரீம் கோர்ட் விசாரித்து, சட்டப் பிரிவுகளை ரத்து செய்தது. இதன் அடிப்படையில் பார்த்தால், குடியுரிமை சட்டப் பிரிவுகள் சில, செல்லாது. இந்தப் பிரிவுகள், குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க, இலங்கை தமிழர்களுக்கு தடையாக உள்ளது. எனவே, குடியுரிமை சட்டப் பிரிவுகள் சிலவற்றை, ரத்து செய்ய வேண்டும். இலங்கை தமிழர்கள், குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க, அனுமதிக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு உள்ளது.
 
இம்மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் தமிழ்செல்வன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வில்சன், 'நோட்டீஸ்' பெற்று கொண்டார். விசாரணை, ந
வ., 11ம் தேதிக்கு, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment