Pages

Saturday, October 5, 2013

திருகோணமலை துறைமுகத்தில் ரஷ்யாவின் இரண்டு கடற்படை போர்க்கப்பல்கள்!

Saturday, October 05, 2013
இலங்கை::திருகோணமலை துறைமுகத்திற்கு ரஷ்யாவின் இரண்டு கடற்படை கப்பல் வந்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர்.
 
இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருத்தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வரேயாட் என்ற போர் கப்பலும் போரின் பூடோமா  என்ற வர்த்தக கப்பலும் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ளன.
போர் கப்பலில் 65 அதிகாரிகளும் 464 கடற்படையினரும் பணியாற்றி வருகின்றனர். இந்த கப்பலின் நீளம் 187 மீற்றராகும்.
 
வர்த்தக கப்பலில் கப்டன் உட்பட 75 சிப்பந்திகள் பணியாற்றி வருகின்றனர். இந்த கப்பலின் நீளம் 162 மீற்றராகும்.
 
இவ்விரு கப்பல்களும் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment