Pages

Saturday, October 5, 2013

ஜனாதிபதி செயலாளரின் அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதியை சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாக; கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்!

Saturday, October 05, 2013
இலங்கை::ஜனாதிபதி செயலாளரின் அழைப்பின் பேரிலேயே தான் நேற்று  ஜனாதிபதியை சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாகவும், இந்த பேச்சுவார்த்தை தொடரலாம் எனவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் பதவியேற்பு மற்றும் ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து நேற்று (04.10.13) ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் பல விடயங்களைப் பற்றி பேசியுள்ளோம். மாகாண சபை என்னவிதமாக செயற்படக் போகின்றது அமைச்சர் பதவிகளை என்னவிதமாகப் பிரிக்க வேண்டும் எவ்வகையான பணிகள் ஒவ்வொரு அமைச்சுக்கும் கிடைக்கப் பெறவேண்டும், அவற்றை எவ்வாறு கையாள்வது, முதலமைச்சருடைய சத்தியப்பிரமாண விடயம், ஏனைய அமைச்சர்களுடைய சத்தியப்பிரமாணம், மாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம் சம்பந்தமாக பல விடயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். தொடர்ந்து பேசுவோம். தொடர்ந்து பேசி எங்களுடைய மக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய முடிவுகளை நாங்கள் எடுப்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

இறுதித் தீர்மானம் ஏதாவது எடுத்தீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேளிவிக்கு பதிலளித்த சம்பந்தன் 'இறுதி  என்ற சொல்லில் அர்த்தம் இல்லை நாங்கள் அந்தந்த காலத்திற்கு ஏற்ற வகையில் விடயங்களைக் கையாள வேண்டும். நாங்கள் பேசிக்ககொண்டு இருக்கிறோம் இறுதியில நல்ல முடிவு எடுப்போம். எல்லாருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் அந்த முடிவுகள் அமையும். ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளேன். அவர் நாட்டினுடைய ஜனாதிபதி. அவருடைய செயலாளர் என்னை அழைத்தார். அந்த அழைப்பின் அடிப்படையில் நான் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளேன். பல முக்கியமான விடயங்களைப் பற்றி பேசியிருக்கின்றோம். எமது பேச்சுவார்த்தை தொடரலாம். திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் தாமதமில்லாமல் விரைவில் பொருத்தமான இடத்தில் நடைபெறும்.' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment