Pages

Saturday, October 5, 2013

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணிலை விலகுமாறு வலியுறுத்தி இன்று எதிர்ப்புப் பேரணி!

Saturday, October 05, 2013
இலங்கை::ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு ரணில் விக்ரமசிங்கவை வலியுறுத்தும் நோக்கிலான எதிர்ப்புப் பேரணி தெய்வேந்திர முனையில் இருந்து இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைமைத்துவம் பல்வேறு தந்திரோபாயங்களை பயன்படுத்தி எதிர்ப்புப் பேரணியை தடுப்பதற்கு முயற்சிப்பதாக தென் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.
 
காலியில் இன்று நடைபெற்ற ஊடகவியவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே மாகாண சபை உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
 
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, பேரணியை சீர்குலைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment