Saturday, October 5, 2013

வடக்கு மாகாணசபைக்கு இந்த அதிகாரங்களை வழங்குவது, குரங்கிற்கு சிறிய கத்தியை வழங்குவதற்கு நிகரானது: அருண் தம்பிமுத்து!

Saturday, October 05, 2013
இலங்கை::வட மாகாணசபைக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்க வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும். வடக்கு மாகாணசபைக்கு இந்த அதிகாரங்களை வழங்குவது, குரங்கிற்கு சிறிய கத்தியை வழங்குவதற்கு நிகரானது.

வட மாகாணத்திற்கு அதிகாரங்களை வழங்குவதற்கு கிழக்கு மாகாண மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்க மாட்டார்கள்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்காக பொலிஸ் திணைக்களத்தை கூறு போடக் கூடாது.

வடக்கு - கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக கடமையாற்றிய வரதராஜபெருமாள் செய்த காரியங்களை எவரும் மறந்து விடக் கூடாது என அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment