Saturday, October 5, 2013

அவுஸ்திரேலியா சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 200 பேரை திருப்பியனுப்பத் தீர்மானம்!

Saturday, October 05, 2013
இலங்கை::அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் நுழைய முற்பட்டபோது நிர்க்கதிக்குள்ளான சுமார் 200 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான அமைப்பிற்கு அறிவித்துள்ளதாக இந்தோனேஷியாவிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி லலித் யூ கமகே தெரிவித்தார்.
 
இவர்களை விரைவில் இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கான விமானப் பயணச் சீட்டுகள் சர்வதேச புகலிடக் கோரிக்கையாளர்கள் அமைப்பினால் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
இதனடிப்படையில் 75 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் முதற்கட்டமாக நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இந்தோனேஷியாவுக்கான இலங்கையில் உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment