Saturday, October 05, 2013
இலங்கை::எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான தெவிநுவர விஸ்ணுகோவிலுக்கு அருகில் இருந்து பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு குழு எதிர்ப்பார்ப்பாட்டத்தை நடத்தியதை தொடர்ந்து, பிரதேசத்தில் பதட்ட நிலை ஏற்பட்டது.
இதன் போது இரண்டு குழுக்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ஐக்கிய தேசிய கட்சியில் பிளவை ஏற்படுத்தி, கட்சியை அழிக்க முற்படும் சக்திகளுக்கு எதிராகவே தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் லசந்த குணவர்தன எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.
தற்போது இந்த பேரணி மாத்தறை நகரை அண்மித்துள்ளதாவும், அங்கு மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டிருப்பதாகவும் எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, துப்பாக்கி சூடு!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தெவிநுவரவில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதில் துப்பாக்கிசூட்டு காயங்களுடனான மூன்று பேர் உள்ளிட்ட காயமடைந்த ஏழு பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த பேரணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, பேரணியில் கலந்துக் கொண்டவர்களுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பதட்ட நிலை காணப்பட்டது.
இதேவேளை இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் தென்மாகாண சபை உறுப்பினர் க்ரிசாந்த புஸ்பகுமாரவும் காயமடைந்த நிலையில் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகும் படி வலியுறுத்தி இன்று மாத்தறையில் இன்று இடம்பெற்ற பேரணியின் போது மோதல் இடம்பெற்றுள்ளது.
ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாக மற்றுமொரு ஆர்ப்பாட்டமொன்றும் மாத்தறையில் இன்று இடம்பெற்றவேளையில் இரு குழுக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இதன்போது தெவிநுவர பகுதியில் வைத்து இரு குழுக்களும் ஒன்றுடன் ஒன்று சந்தித்த வேளையிலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தோர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.
மேலும் இதன் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் அக்கட்சியின் தெற்கு மாகாணசபை உறுப்பினர் நிசாந்த புஸ்பகுமார காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment