Pages

Saturday, October 5, 2013

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு!


Saturday, October 05, 2013
இலங்கை::புதுக்குடியிரப்பு ஒட்டுசுட்டான் வீதியில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்குகுழிப் படையினரால் குண்டு வைத்து நேற்று  மாலை குண்டு வைத்து தகர்க்க்பபட்டுள்ளது.  மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அவர்கள் புதுக்குயிருப்பு மாலதி விளையாட்டரங்கில் தங்கவைக்கப்பட்ட பின்னர் நேற்று மாலை 6.45 மணியளவில் பாரிய பெடிமருந்துகள் கொண்டு வெடிக்கவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் எதிரொளி 10 கிலோ மீற்றர் தூரத்திற்கு கேட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
 
வெடிச் சத்தம் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் பாரிய வெடிமருந்துகள் கொண்டு இந்த வீடு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிக்கப்படுகின்றது.  அப்பகுதியில் மிதிவெடி அகற்றுவதற்கு அந்த பதுங்குழியை பார்வையஜட் முடியாது என்று தெரிவித்த படையினர் இதனை தகர்க்கும் நடவடிக்iயில் ஈடுபட்டமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த காலத்தில் வன்னிப்பகுதியில் இருந்த புலிகளின் பயங்கரவாத அடையாளச் சின்னங்கள் யாவும்  அழிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக வன்னிப்பகுதியில் இருந்த புலிகளின் துயிலுமில்லங்கள் மற்றும் புலிகளின் நினைவுச் சின்னங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளது  எஞ்சியிருந்த பிரபாகரனின் வீடு அழிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலத்தில் ஏஞ்சியுள்ள புலிகளின் அடையாளச்சின்னங்களும் அழிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது..
 
யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி வீட்டினைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வந்து சென்றனர் இதனால் இது சுற்றுலா மையமாக இதுவரை காலமும் இருந்து வந்தது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பதுங்கு குழி வீட்டினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு படையினர் தடைவிதித்திருந்தனர். அந்த பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தைச்சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவற்றை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதையடுத்தே அந்த பதுங்கு குழியை மக்கள் பார்வையிடுவது தடைச்செய்யப்பட்டிருந்ததாக படைத்தரப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்...
 
இலங்கையில்,  புலி தலைவர் பிரபாகரனின் பதுங்கு இடம், தகர்க்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கும்,  புலிகளுக்கும் இடையே, 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த சண்டை, 2009ல் முடிவுக்கு வந்தது. அதே ஆண்டில், மே, 18ம் தேதி, பிரபாகரன், 54, ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். 
 
புலிகளின் கோட்டையாக இருந்த முல்லை தீவின், புது குடியிருப்பு பகுதியில், பிரபாகரன் பதுங்கு இடத்தை ராணுவத்தினர் கண்டு பிடித்தனர். தற்போது, இந்த பகுதியில்,  புலிகளின் ஆதரவு அமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைந்துள்ளது. இந்த பதுங்கு இடத்தை அப்படியே விட்டால், வடக்கு மாகாண அரசு, இதை, நினைவிடமாக அறிவிக்கும் என்பதால், இலங்கை ராணுவத்தினர், இந்த பதுங்கு இடத்தை, வெடி வைத்து தகர்த்து விட்டனர்.
 
இதையொட்டி, இப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை, புதுகுடியிருப்பு மக்கள் உறுதி செய்துள்ளனர்.ஆனால், ராணுவம் இது தொடர்பாக கருத்து கூற மறுத்து விட்டது. 

No comments:

Post a Comment