Pages

Saturday, October 5, 2013

(புலி)கூட்டமைப்புக்குள் கருத்து முறண்பாடு - சேனாதிராஜா இந்தியா சென்றார்!!

Saturday, October 05, 2013
இலங்கை::(புலி)கூட்டமைப்புக்குள் கருத்து முறண்பாடு - சேனாதிராஜா இந்தியா சென்றார்
 
தமிழ்த் தேசிய  (புலி)கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்றுக் காலை இந்தியா பயணமானார்.

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ முன்னிலையில் சிவி.விக்னேஸவரன் பதவிப் பிரமானம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், இந்த நிலையில் இந்தியா சென்றுள்ளதாக  (புலி)கூட்டமைப்பின் ( காடுவெட்டி) வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

ஒரு வாரத்தின் பின்னர்தான் அவர் தாயகம் திரும்புவாரெனவும், 7ஆம் நாள் நடைபெறவுள்ள பதவிப் பிரமாண நிகழ்வில் தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் ஏனைய கட்சிகள் கலந்து கொள்ளாமாட்டாவெனவும் காடுவெட்டி சிவசக்தி ஆனந்தன் மேலும் கூறினார்.

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனது பதவியேற்பை புறக்கணிக்கப் போவதாக டெலோ இயக்கம் அறிவித்துள்ளது.
 
ஏகோபித்த ஆதரவினால் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சீ.வி.விக்கினேஸ்வரன் பதவி பிரமாணம் செய்வதென்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதனாலேயே டெலோவின் பொதுக்குழு  வவுனியாவினில் ஒன்று கூடி பதவியேற்பு நிகழ்வை புறக்கணிப்பதென தீர்மானித்துள்ளதாக கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
 
இதனிடையே  (புலி)கூட்டமைப்பிலுள்ள ஏனைய பங்காளிக்கட்சிகளும் இவ்விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தன்னிச்சையாக கூட்டமைப்பின் தலைமை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ சந்தித்தமை மற்றும் மற்றும் முதலமைச்சரை அவர் முன்னிலையினில பதவியேற்க திட்டமிட்டமை தொடர்பில் அவர்கள் அதிர்ப்த்தி அடைந்துள்ளதாகவும்
 
தமிழரசு கட்சியிலும் சரவணபவன் மற்றும் சுமந்திரன் தவிர்ந்த ஏனையவர்கள் சம்பந்தனது நடவடிக்கைகளால் அதிர்ந்து போனாலும்  கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு செல்ல வேண்டிய தேவை தமிழரசுக் கட்சிக்கு தற்போது ஏற்பட்டு உள்ளதாகவும் எனினும் பொது செயலர் மாவை சேனாதிராசா இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment