Pages

Saturday, October 5, 2013

இலங்கை மீனவர்கள் இருவருக்கு காவல் நீட்டிப்பு!:-ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையில் அடைப்பு!

Saturday, October 05, 2013
ராமேஸ்வரம்::எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, ராமேஸ்வரம் அருகே, தனுஷ்கோடியில் கைதான, இலங்கை மீனவர்கள் இருவருக்கு, "வீடியோ கான்பரன்சிங்' மூலம், சிறைக்காவல் நீட்டிக்கப்பட்டது. இலங்கை நீர்க்கொழும்பை சேர்ந்த, மீனவர்கள் இருவர், ஜூலை 21ம் தேதி, திசை மாறி தனுஷ்கோடியில் கரை இறங்கினர்.இருவரையும் போலீசார், கைது செய்து, ராமேஸ்வரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சென்னை, புழல் சிறையில் அடைத்தனர். நேற்று, இவ்வழக்கு, ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம், அக்., 11ம் தேதி வரை, சிறைக்காவலை நீட்டித்து, நீதிபதி, சரவணக்குமார் உத்தரவிட்டார்.
 
ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் இலங்கை சிறையில் அடைப்பு!
 
இலங்கை மீனவர்கள் பிடித்துச் சென்ற, ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை, அக்., 14ம் தேதி வரை, சிறையில் அடைக்க, இலங்கை ஊர்க்காவல் துறை கோர்ட் உத்தரவிட்டது. இந்திய கடல் எல்லையில், கடந்த அக்., 2ம் தேதி, மீன்பிடித்துக் கொண்டிருந்த, ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை, படகில் வந்த, இலங்கை நெடுந்தீவு மீனவர்கள் தாக்கி, சிறை பிடித்து, அந்நாட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று, நான்கு மீனவர்கள் மீதும், எல்லை தாண்டியதாக போலீசார் வழக்கு பதிந்து, ஊர்க்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அக்., 14ம்தேதி வரை, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க, நீதிபதி, மகேந்திர ராஜா உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment