Monday, June 3, 2013

நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி நாளை இலங்கைக்கு வருகை!

Monday, June 03, 2013
இலங்கை::நியூஸிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் மரே மெக்கலி நாளை இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
 
அவர் இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருப்பார் என வெளிவிவகார செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
 
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ ஆகியோருடன் நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
 
நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு என்பன தொடர்பிலும் மரே மெக்கலி இந்த விஜயத்தின்போது கவனம் செலுத்தவுள்ளார்.
 
இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காகவே நியூஸிலாந்து வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளிவிவகார செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment