Monday, June 3, 2013

அமெரிக்காவுக்கு செல்ல மெக்சிகோவில் ஊடுருவிய 7 இந்தியர்கள் கைது!

Monday, June 03, 2013
மெக்சிகோ சிட்டி::மெக்சிகோ நாட்டில் ஊடுருவிய இந்தியர்கள் 7 பேர் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 
 
7 இந்தியர்கள், 5 எல் சல்வேடார் நாட்டை சேர்ந்தவர்கள், ஹோண்டுராஸ் நாட்டை சேர்ந்த 3 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கடந்த மாதம் மட்டும் மெக்சிகோவுக்குள் ஊடுருவிய 122 பேர் கைது செய்யப்பட்டனர். அமெரிக்காவுக்குள் ஊடுருவ, மெக்சிகோ எல்லையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எல்லையில் பலத்த கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமைதான் ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 43 பேரை கைது செய்தோம்.

அவர்களில் 30 பேர் இந்தியர்கள். எக்டேபெக் என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் அவர்கள் பதுங்கி இருந்த போது பிடிபட்டனர்Õ என்றனர். அமெரிக்காவுக்குள் நுழைய, ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், மெக்சிகோவுக்குள் ஊடுருவி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரி
விக்கின்றன.

No comments:

Post a Comment