Monday, June 03, 2013
ஜெருசலேம்::பேஸ் புக்கில் தங்களுடைய ஆபாச படங்களை வெளியிட்ட பெண் ராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஆணும் பெண்ணும் 18 வயது நிரம்பியவுடன் ராணுவத்தில் சில காலம் பணிபுரிகின்றனர். இளம் வயதில் ராணுவத்தில் சேருபவர்கள், ஆட்டம் பாட்டத்துடன் விதிமுறைகளை மீறி செயல்படுகின்றனர் என்று தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
இந்நிலையில், பேஸ் புக் பக்கத்தில் ஜட்டியுடன் இருப்பது போன்ற படங்களை சில பெண் ராணுவ வீரர்கள் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வெஸ்ட் பேங்க் பகுதியில் நடனமாடிய வீடியோவையும் பெண் ராணுவ வீரர்கள் வெளியிட்டிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ராணுவ வீரர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், ராணுவ கட்டுப்பாடுகளை மீறி ஆபாசமாக படம் வெளியிட்ட பெண் ராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் மற்றவர்களும் விதிமீறி செயல்படுவதை தடுக்க, ராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். எனினும், ஆபாச படம் வெளியிட்ட பெண் வீரர்கள் யார் யார், அவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது போன்ற விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

No comments:
Post a Comment