Pages

Friday, May 24, 2013

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சியும் எட்டியிருப்பதாக: சிறிலங்கா கம்மியூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்!

Friday, May 24, 2013
இலங்கை::நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சியும் எட்டியிருப்பதாக சிறிலங்கா கம்மியூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.
 
சோசலிச மக்கள் முன்னணியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட குடியரசு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
 
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய லங்கா சமசமாஜ கட்சியின் பொதுசெயலாளர் திஸ்ஸ வித்தாரண, அரசாங்கத்தினால் இணங்கப்பட்ட வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடக்கில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
குடியரசு தின நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜனநாயக இடதுசாரி கட்சியின் பொது செயலாளரான அமைச்சர் வாசுதேவ நாயக்கார கருத்துதெரிவிக்கையில், 18 வது அரசியலமைப்பு காரணமாக பொதுமக்களின் நலன்புரி சேவைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

No comments:

Post a Comment