Pages

Tuesday, May 7, 2013

வடமாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, May 07, 2013
இலங்கை::வடமாகாணசபைத் தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி போன்றன வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துமாறு கோரியிருந்தன.
 
தேர்தலின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவதா அல்லது இல்லையா என்பதனை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானிப்பார் என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார். வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவது குறித்து தமக்கு எவ்வித எதிர்ப்பும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை, தேர்தல் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத காரணத்தினால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர்ந்த ஏனைய தேர்தல்களின் போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment