Pages

Tuesday, May 7, 2013

சிறைச்சாலையில் இருந்தவாறு கொலை மிரட்டல் விடுத்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு பேர் கைது!:-விபச்சார விடுதி ஒன்றை கம்பஹா பொலிஸார் முற்றுகை: மூன்று பெண்கள் கைது!

Tuesday, May 07, 2013
இலங்கை::சிறைச்சாலையில் இருந்தவாறு கொலை மிரட்டல் விடுத்து வர்த்தகர்களிடம் கப்பம் பெற்ற இரண்டு பேரை மிரிஹான விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
நுகேகெடை பிரதேசத்தைச் சேர்ந்த 20 வர்த்தகர்களிடம் கப்பம் பெறப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலைக்குள் இருந்தவாறே கையடக்கத் தொலைபேசிகளுக்கு மீள் நிரப்பு கட்டணமாக சந்தேகபநபர்கள் கப்பம் பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தமது கைடயக்கத் தொலைபேசிக்கு மீள் நிரப்பப்பட்ட பணத்தை சிறைச்சாலைக்கு வெளியேயுள்ளவர்களின் கையடககத் தொலைபேசிகளுக்கு அனுப்பி அவர்களின் ஊடாக சந்தேகநபர்களின் மனைவியருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாத்தூவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் பிலியந்தலையைச் சேர்ந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
விபச்சார விடுதி ஒன்றை கம்பஹா பொலிஸார் முற்றுகை: மூன்று பெண்கள் கைது!
 
கம்பஹா - கெசெல்வத்துகொட - யக்கல பிரதேச வீடொன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை கம்பஹா பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

குறித்த விபச்சார நிலையம் முற்றுகையிடப்பட்ட போது மூன்று பெண்களும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் 21, 23, 42 வயதுகளையுடைய குருநாகல், வலவிவத்த, சாதிக்காவத்த பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்கள் இன்று  கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர். 

No comments:

Post a Comment