Wednesday,May,22,2013
இலங்கை::வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த கூடாது என்று பொது பல சேனா அமைப்பு
தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதனிடையே, 13வது திருத்தச் சட்டத்தை பொதுமக்களின் கருத்து கணிப்பு இன்றி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெறும்பான்மையுடன் நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
எந்த காரணத்திற்காகவும் வடக்கில் தேர்தல் நடத்த கூடாது என்பதே எமது கோரிக்கை. அரசாங்கம் ஒரு நேரத்தில் கூறுகின்றது. இதுதொடர்பில் மக்கள் கருத்து கணிப்பு நடத்த வேண்டும் என்று கூறுகிறது. அதனையும் மேற்கொள்ள கூடாது என்றே எங்கள் கூறுகின்றறோம்.

No comments:
Post a Comment