Pages

Wednesday, May 22, 2013

3600 கிராம் கஞ்சாவுடன் ஜேர்மன் நாட்டு பிரஜையை கைது:-மாத்தறை பொலிஸ் சிறைக்கூடத்தில் இருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது!

Wednesday, May 22, 2013இலங்கை::3600 கிராம் கஞ்சாவுடன் ஜேர்மன் நாட்டு பிரஜையை கைது செய்துள்ள பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அஹுங்கலையில் சூதாட்டநிலையத்தை சுற்றிவளைக்க பொலிஸார் சென்றபோது அவ்விடத்திலிருந்த ஜேர்மன் நாட்டு பிரஜையை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

இதன்போதே அவரிடமிருந்து கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
மாத்தறை பொலிஸ் சிறைக்கூடத்தில் இருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கைது!
 
மாத்தறை பொலிஸ் சிறைக்கூடத்தில் இருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
அக்குரஸ்ஸ - மாரம்ப பகுதியில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரை கொலைசெய்தமை தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர் தப்பிச்சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
சந்தேகநபர் மாத்தறை பகுதியில் கைதுசெய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
 
பின்னர், சந்தேகநபரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

No comments:

Post a Comment