Pages

Wednesday, May 22, 2013

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தின்(ஆசியோ) தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!

Wednesday,May,22,2013
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பிலான அவுஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு நிறுவனத்தின்(ஆசியோ) தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திலேரலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக திகழ்வதாகத் தெரிவித்து குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
 
41 வயதான மனோகலா ஜெனதர்ஸன் என்ற இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளரே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  அவரது ஆறு வயது மகனும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும், ஆசியோவின் அண்மைய தீர்மானத்திற்கு அமைய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ளார். தற்போது விலாவுட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆசியோவின் தீர்மானத்திற்கு அமைய மனோபாலாவும், அவரது ஆறு வயது மகனான ராஜகவனும் விடுவிக்கப்படவுள்ளனர்.
 
இதேவேளை, தேவை ஏற்பட்டால் மீண்டும் பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை விடுக்கப்படும் என ஆசியோ அறிவித்துள்ளது.
 

No comments:

Post a Comment