Pages

Thursday, May 23, 2013

குட்டியூண்டு சைஸ்.. உலகிலேயே ஃபாஸ்ட் 20 வினாடியில் சார்ஜ் ஏற்றும் மினி கருவி இந்திய இளம்பெண் அசத்தல் கண்டுபிடிப்பு!

Thursday, May 23, 2013
வாஷிங்டன்::செல்போனை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் மிகச் சிறிய கருவியை, இந்திய வம்சாவளியை சேர்ந்த 18 வயது இளம்பெண் கண்டுபிடித்துள்ளார். இவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி இன்டெல் நிறுவனம் கவுரவித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சரடோகா பகுதியை சேர்ந்தவர் இஷா கரே (18). இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண். இவர் குறைந்த நேரத்தில் செல்போனை சார்ஜ் செய்யும் மிகச்சிறிய கருவியை கண்டுபிடித்துள்ளார். 20 வினாடிகளில் செல்போன் சார்ஜ் ஆகும் வகையில் சூப்பர் கெபாசிட்டர் கருவியை இஷா கண்டுபிடித்துள்ளார். இதற்காக இன்டெல் பவுண்டேஷன் இஷாவுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கி கவுரவித்துள்ளது. மேலும், ரூ.27 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூப்பர் கெபாசிட்டர் கருவியை செல்போன் பேட்டரியில் பொருத்திவிட்டால் போதும். 20 வினாடிகளில் சார்ஜ் ஆகிவிடும்.

இதுகுறித்து இஷா கூறுகையில், என் செல்போன் பேட்டரி அடிக்கடி சார்ஜ் போய் விடும். எனவே, சக்தியை நீண்ட நேரம் சேமித்து வைக்கவும், குறைந்த நேரத்தில் சார்ஜ் செய்யவும் ஒரு கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அதற்கான முயற்சியில் இறங்கினேன். மிகச்சிறிய சூப்பர் கெபாசிட்டரை கண்டுபிடித்தேன்Õ என்கிறார். இந்த சூப்பர் கெபாசிட்டர் கருவியை முதலில் எல்இடி விளக்குகளில் சோதித்து பார்க்கப்பட்டது. அதன்பிறகுதான் செல்போன் உள்பட எல்லா எலக்ட்ரானிக் பொருட்களிலும் இதை பயன்படுத்த முடியும் என்று தெரிய வந்தது. உலகிலேயே மிக விரைவாக சார்ஜ் ஏற்றும் கருவி இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment