Pages

Saturday, March 16, 2013

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம்!

Saturday, March 16, 2013
சென்னை::இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கச்சத் தீவு அருகே மீனபிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 53 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 34 பேர் தற்போது விடுவிக்கப்பட்ட நிலையில், இதர மீனவர்களையும் விடுவிப்பது குறித்து அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக கரியவாசம் தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை மீறுவதே இத்தகைய பிரச்சனைக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாக கூறிய அவர், அவர்கள் இலங்கை மீனவர்களை தொந்தரவு செய்வதாக குற்றம் சாட்டினார்.

மேலும், இதுகுறித்து தங்கள் நாட்டு மீனவர்கள் கடற்படையிடம் புகார் செய்ததாகவும், அதன் அடிப்படையிலேயே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை இடையே மிகக் நெருக்கமான நட்பு உறவு உள்ளது என கரியவாசம் தெரிவித்துள்ளார்.

எல்லை தாண்டும் மீனவர்களை வழிநடத்துவது குறித்து இந்திய அரசு கூறும் அறிவுரைகளை ஏற்க தயாராக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment