Pages

Wednesday, March 6, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுக்கப்படும் - இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக்ஸான்டர் கர்ச்சாவா!

Wednesday, March 06, 2013
இலங்கை::மனித உரிமை விவகாரங்களை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது என ரஸ்யா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு அநீதி இழைக்கப்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுக்கப்படும் என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக்ஸான்டர் கர்ச்சாவா தெரிவித்துள்ளார்.இலங்கை – ரஸ்ய உறவுகளுக்கு 56 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை விவகாரம் தொடர்பில் உலக நாடுகள் ஒரேவிதமான கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்ற வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு போதியளவு உதவிகளை வழங்குவதே எமது நோக்கம் என அவர் சுட்டிக்காட்டிள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இம்முறை அமர்வுகள் இலங்கைக்கு சவாலாகவே அமையும் என அவர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment