Wednesday, March 06, 2013
இலங்கை::காணாமல் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று வவுனியாவில் இன்று நடைபெற்றது.
காணாமல் போனவர்களின் உண்மையான தகவல்களை வழங்குமாறு கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட மேலதிக அரச அதிபரிடம் கையளித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ-9 வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் இதனால் வாகன போக்குவரத்திற்கு மாற்று வழிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை கொழும்பில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கொழும்பை நோக்கி வர முயற்சித்த வேளையில் பாதுகாப்பு காரணங்கள் கருதி அவர்களுக்கு பயண அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
கொழும்பு நோக்கி வர முடியாதவர்களே வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து வவுனியா மாவட்ட அரச அதிபரின் ஆலோசனைக்கு அமைய மேலதிக அரசாங்க அதிபர் ஆர்ப்பாட்டக்காரர்களின் மகஜரை ஏற்றுக் கொண்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்

No comments:
Post a Comment