Pages

Wednesday, March 6, 2013

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அவசரமாக அமெரிக்கா பயணம்!

Wednesday, March 06, 2013
சென்னை::ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி அவசரமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்சவை கண்டித்து ஜெனீவாவில் அமெரிக்கா சார்பாக தாக்கல் செய்யப்படும் தீர்மானத்தை ஒன்றுமில்லாமல் செய்ய அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக செய்தி வட்டாரங்கள் கூறுகின்றன.

சிறிது நாட்களுக்கு முன்பாக கொழும்பு சென்று அதிபர் ராஜபக்சவையும் சந்தித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா  அதிபர் ராஜபக்சவுக்கு எதிரான தீர்மான அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு மொத்தம் 47 நாடுகளில் 30 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இந்தத் தீர்மானத்தை தோற்கடிக்க அதிபர்  ராஜபக்சவுக்கு ஆதரவாக சுப்பிரமணிய சாமி செயல்படுவதாக புலிகளின் ஆதரவாளர் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலைஇல் அமெரிக்காவின் நியூயார்க் கென்னடி விமானநிலையத்தில் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் கூடினர். பிறகு வாஷிங்டன் சென்று அமெரிக்க உயரதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

No comments:

Post a Comment