Pages

Wednesday, March 6, 2013

(புலிகள் ஆதரவு) டெசோ நாடகம் தலைநகர் டெல்லியில் நாளை அரங்கேற்றம் : மு.க.ஸ்டாலின் பயணம்!

Wednesday, March 06, 2013
சென்னை::(புலிகள் ஆதரவு) டெசோ நாடகம் தலைநகர் டெல்லியில் நாளை அரங்கேற்றம் : மு.க.ஸ்டாலின் பயணம்!  

மனித உரிமைகளை மீறிய இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஈழத்தமிழர் வாழ்வில் விடியலை ஏற்படுத்தவும் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும்  (புலிகள் ஆதரவு)டெசோ அமைப்பு பல்வேறு வகைகளில் போராடுகிறது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் செயல்படும் `டெசோ' அமைப்பு நேற்று சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

அகில இந்திய அளவில் இந்த பிரச்சினையை கொண்டு சென்று ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் டெல்லியில் நாளை (7-ந்தேதி)  (புலிகள் ஆதரவு)டெசோ மாநாடு கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க, அகில இந்திய அளவில் அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பல்வேறு மனிதநேய அமைப்புகளுக்கும் டெசோ அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 (புலிகள் ஆதரவு) டெசோ மாநாட்டில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் இன்று காலை 6.45 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி துர்கா, தயாநிதி மாறன் எம்.பி., சுகவனம் எம்.பி. ஆகியோரும் உடன் சென்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் நாளை நடை பெறும்  (புலிகள் ஆதரவு)டெசோ மாநாட்டில் சர்வதேச அமைப்புகளை சார்ந்த பிரதிநிதிகள், இந்தியாவில் உள்ள தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும் என எதிர்பார்க்கிறோம்.

அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளி ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

No comments:

Post a Comment