Pages

Friday, March 15, 2013

வாழ்க இந்தியா ராஜீவ்காந்தியைக் கொலை செய்து விட்டு தேர்வில் தங்க பதக்கம் பெற்று சாதனை: பிரதமர்களை உருவாக்கும் இந்தியா: பிரதமர்களை போட்டு தள்ளும் புலி!

Friday, March 15, 2013
சென்னை::ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு,தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவருள் ஒருவரான பேரறிவாளன், தொழிற்கல்வி தேர்வில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 9 மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தொழிற் கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மகாத்மாகாந்தி சமுதாய கல்லூரி மூலமாக இந்த கல்விப்பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டு இதன் மூலம் தொழில் கல்வி கற்ற 185 கைதிகள் தேர்வு எழுதினார்கள்.

அவர்களில் 175 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் சிறப்பு அம்சமாக, 5 கைதிகள் அதிக மதிப்பெண்கள் வாங்கி தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஐவருள் ஒருவரான பேரறிவாளன், டி.டி.பி எனப்படும் கணினி தட்டச்சு டிப்ளமோ தேர்வில், தங்கபதக்கம் பெற்றுள்ளனர்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இவர் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment