Friday, March 15, 2013
திருவள்ளூர்::இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை உள்பட பல்வேறு சட்டக் கல்லூரிகளில் படிக்கும் திருவள்ளூரை சேர்ந்த மாணவர்கள், நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இன்று காலை 8.15 மணியளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் 50-க்கும் அதிகமான சட்டக் கல்லூரி மாணவர்கள் திரண்டனர். சென்ட்ரல் புறப்பட தயாராக நின்று கொண்டிருந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். ‘இனப் படுகொலை செய்த ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்று கோஷமிட்டனர். தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரயில்வே போலீசார் வந்து மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். போராட்டத்தால் 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:
Post a Comment