Friday, December 07, 2012
இலங்கை::விசாரணைக்காக சென்ற யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆறு பேரும் பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
விசாரணைகளுக்கு பின்னரே அவர்கள் மேலதிக விசாரணைக்களுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சில வேளைகளில் அவர்களை வவுனியாவுக்கு அழைத்துச்செல்லக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் நால்வர் கடந்த 29ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன் அதில் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். ஏனைய மூவர் தொடர்ந்தும் வவுனியா பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:
Post a Comment