Pages

Friday, December 7, 2012

மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் புலிகளின் சார்பில் குரல் கொடுத்து வருவதாக அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்!

Friday, December 07, 2012
இலங்கை::மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்  புலிகளின் சார்பில் குரல் கொடுத்து வருவதாக அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆயர் ராயப்பு ஜோசப்,  புலிகளின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் இழப்பிற்கு படையினரே காரணம் என ஆயர் ராயப்பு ஜோசப் குற்றம் சுமத்திய போதிலும், புலிகளின் கொடுமைகள் குறித்து வாய் திறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத மடு தேவாலயம் உள்ளிட்ட புனிதப் பகுதிகளை புலிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்கு படையினர் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நிலைமைகள் குறித்து ஆயர் ராயப்பு ஜோசப் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நோக்கங்களின் அடிப்படையில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இலங்கையர்கள் பொருளாதார நலன்களை எதிர்பார்த்து இவ்வாறு பிரவேசிப்பதாக அருட்தந்தை செல்வராஜா தெரிவித்துள்ளார்...

எனினுத் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்  புலிகளின் சார்பில் குரல் கொடுத்து வருவதாகவும்  புலிகளின் கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாகவும் அருட்தந்தை நிகலோஸ் செல்வராஜ் தனது பகிரங்க கடிதத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொதுமக்கள் இழப்பிற்கு படையினர் காரணம் என கூறியுள்ள மன்னார், புலிகள் இயக்கத்தின் அவாடிகள் குறித்து வாய் திறக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment