Pages

Friday, December 7, 2012

இலங்கையருக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றம்!

Friday, December 07, 2012
இலங்கை::கொலைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவருக்கு அபுதாபியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

துப்பாக்கியில் சுடப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய அரபு இராச்சிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலெக்ஸ் ரோஹண என்ற இலங்கையருக்கே இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர் 2002ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள பொறியியலாளர் ஒருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் நிராகரித்த நிலையில் இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment