Monday, December 10, 2012
இலங்கை::கைதுசெய்யப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் ஆறு பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளுக்காக கைதுசெய்யப்பட்ட குறித்த மாணவர்கள் இன்று யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ். தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் தெரிவித்துள்ளார்.
ஏனையவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
விடுவிக்கப்பட்டுள்ள மாணவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக நிருவாகத்தினரிடம் கையளிக்கப்படுவார்கள் எனவும் யாழ்.தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார்.
இதேவேளை, கைதுசெய்யப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

No comments:
Post a Comment