Pages

Monday, December 10, 2012

சில்ப 2012” கண்காட்சி விற்பனை சந்தை தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது!

Monday, December 10, 2012
இலங்கை::பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி; அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் வருடந்தோறும் நடாத்தப்பட்டுவரும் “சில்ப 2012” கண்காட்சியும், விற்பனை சந்தையும் தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெற்றது.

இதன்பிரகாரம் அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்பு நிலையம், தேசிய அருங்கலைகள் பேரவை, பனை அபிவிருத்தி சபை மற்றும் வடகடல் நிறுவனம் ஆகியவற்றுடன் கித்துளையும் ஒருங்கிணைத்து மேற்படி கண்காட்சியும், விற்பனைக்கூடமும் நடைபெறவுள்ளது.

மேற்படி நிறுவனங்களினது தொழிற்துறை நடவடிக்கைகள் அவற்றின் ஊடாக பயனாளிகளும், மக்களும், நிறுவனங்களும் அடைந்துவரும் நன்மைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்ட அதேவேளை, கண்காட்சியின் நோக்கம் தொடர்பாக அமைச்சர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மகிந்த சிந்தனைக்கு அமைவாக கைப்பணிகள் மற்றும் சிறிய நடுத்தர கைத்தொழில்துறைகளை மேம்படுத்தும் பொருட்டு இம்மாதம் 27 ம் திகதி முதல் 30 ம் திகதிவரையான நான்கு நாட்களும் நடைபெறவுள்ள “சில்ப 2012” கண்காட்சி நிகழ்வின் ஊடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மென்மேலும் மேம்படுத்துவதே அமைச்சினது முக்கிய இலக்காகும்.

“சில்ப 2012;” கண்காட்சியும், விற்பனை சந்தையும் சிறப்புற நடைபெறுவதற்கு அமைச்சினதும், நிறுவனங்களினதும் துறைசார்ந்தவர்கள் ஒன்றிணைந்து பங்காற்ற வேண்டுமெனவும் அமைச்சர் அவர்கள் இதன்போது கேட்டுக் கொண்டார்.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வரும் “சில்ப 2012” கைப்பணிகள் சிறிய மற்றும் கைத்தொழில் முயற்சிகளுக்கான கண்காட்சியும் விற்பனைசந்தையும் குறிப்பிட்ட நான்கு நாட்களும் கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா உள்ளிட்ட அமைச்சினதும், நிறுவனங்களினதும் துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment