Pages

Monday, December 10, 2012

யாழ். குடாநாட்டில் கைதானவர்கள் தொடர்பில் 18 முறைப்பாடுகள் - இ.ம.உ.ஆ!

Monday, December 10, 2012
இலங்கை::யாழ். குடாநாட்டில் அண்மையில் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலை குறித்து கண்காணிப்பதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற கைதுகள் தொடர்பில் தமது நிலையத்திற்கு இதுவரை 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதென ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் உரிய நடைமுறைக்கு அமைவாகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையங்களுக்கு சென்று அவர்களின் நிலை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆராயவுள்ளதாக யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டரீதியான கைது என்பதால் உரிமைமீறல் என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் நலன் குறித்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் தொடர்ந்தும் மேற்பார்வை செய்வார்கள் என ரி.கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment