Pages

Saturday, December 8, 2012

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன நிமல் சிறிபால டி சில்வா!

Saturday, December 08, 2012
இலங்கை::பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என்று சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

பிரதம நீதியரசருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் மூன்று குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு குற்றச்சாட்டுக்களிலிருந்தும் பிரதம நீதியரசர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்....

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்த ஆற்றிய உரை தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சம்பந்தன் உரையின் முதல் பகுதியில் அவர் தெரிவித்த விடயங்கள் குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத நிலைப்பாடுகளில் இருந்து மாறியுள்ளது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளது.

 புலிகள் சிங்கள மக்களை மாத்திரம் கொலை செய்யவில்லை. எனினும் கூட்டமைப்பின் இதற்கு இவ்வாறு சுதந்திரமாக பேச முடியாதிருந்தது. ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கு புண்ணியம் கிடைக்க, கூட்டமைப்பின் தற்போது சுதந்திரமாக பேசுகின்றனர். தற்போது, தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் தேவையே நமக்குள்ளது. இராணுவம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தி, இனங்களின் மனங்களை வென்று வருகிறது. எனினும் இதனை இதை விட துரிதப்படுத்த வேண்டும். நாட்டுக்கு தேவையானதை இராணுவத்தினர் நிறைவேற்றினர், இப்போது அவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு கூறமுடியாது எனவும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment