Pages

Saturday, December 8, 2012

புலிகள் இயக்கத்தை மீள இயங்கச் செய்ய இரகசிய சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

Saturday, December 08, 2012
இலங்கை::புலிகள் இயக்கத்தை மீள இயங்கச் செய்ய இரகசிய சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளை மீளவும் ஆயுதம் ஏந்தச் செய்ய சில தரப்பினர் முயற்சித்ததாகவும், இந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை பயன்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

புலிகளைச் சேர்ந்த மலேசியன் சிஸ்டர் என்ற பெண் ஒருவர் வல்வெட்டித்துறையில் இயங்கும் நிறுவனமொன்றுக்கு பல கோடி ரூபா பணம் அனுப்பி வைத்துள்ளார்.

புலிகளை மீள இயங்கச் செய்யும் நோக்கில் இந்தப் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை ஒருங்கிணைத்து குழப்பங்களை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு சில தமிழ் அரசியலவாதிகளும் உடந்தை.

இந்த இரகசிய சூழ்ச்சித் திட்டத்திற்கு தமிழகத்தில் வாழும் புலி ஆதரவாளர்களும் உடந்தையாக செயற்படுகின்றனர்.

சூழ்ச்சித் திட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்ட தமிழ் அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படுவார்கள் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment