Saturday, December 08, 2012
வேலூர்::வேலூர், சேலம் மத்திய சிறைகளில் இன்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.1.50 லட்சம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மத்திய சிறையில் சுமார் 900 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு இன்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வேலூர் எஸ்பி ஈஸ்வரன் தலைமையில் டிஎஸ்பிக்கள் தட்சிணாமூர்த்தி (வேலூர்), மதிவாணன் (காட்பாடி), சீதாராமன் (அரக்கோணம்) மற்றும் போலீசார் என 125 பேர் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலூர் மத்திய சிறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அவர்கள் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் அறைகளுக்குள் சென்று செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் இருக்கிறதா? என சோதனை நடத்தினர். அப்போது செல்போன், பணம், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காலை 9 மணிக்கு ரெய்டை முடித்துக்கொண்டு போலீசார் வெளியே வந்தனர். அப்போது எஸ்பி ஈஸ்வரன் கூறுகையில், ÔÔகைதிகளிடம் இருந்து ரூ.1 லட்சத்து 38 ஆயிரம், 5 செல்போன்கள், 6 சிம்கார்டுகள், கஞ்சா 20 கிராம், 13 செல்போன் பேட்டரிகள் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், பீடிக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுÕÕ என்றார். சேலம் சேலம் மத்திய சிறையில் 800க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அஸ்தம்பட்டி உதவி கமிஷனர் தங்கதுரை தலைமையில் 3 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 200 போலீசார் இன்று அதிகாலை 5.50 மணிக்கு திடீரென சிறைக்குள் புகுந்து சோதனை நடத்தினர். ஒவ்வொரு அறையாக சென்று நடத்திய சோதனையில் கைதிகளிடம் இருந்து ஏராளமான தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இதில் ரூ. 18,355, 1 சிம், 1 செல்போன், 194 பீடி கட்டுகள், 49 சிகரெட் லைட்டர்கள், 100 கிராம் கஞ்சா, 2 செல்போன் பேட்டரி, 1 ஹெட் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கடலூர் மத்திய சிறையில், இன்று காலை 7.40 மணிக்கு சிறைத்துறை தலைவர் திரிபாதி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment