Monday, April 9, 2012

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் கொள்ளை சந்தேகத்தில் பெண் கைது!:-கூலிக்கு அறை கொடுத்து அரைகுறையாக படமெடுத்த சந்தேகநபர் கைது!

Monday, April, 09, 2012
இலங்கை:: வவுனியா செட்டிக்குளம் இலக்கம் 3 மெனிக்பாம் முகாமில் உள்ள வீடொன்றில் தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பவற்றைகொள்ளையிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் இருந்து 1,84,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களும் 2000 ரூபா பணமும் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது குறித்து செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அப்பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவரிடம் இருந்து களவாடப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபரான பெண்ணை வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் பிரதேசத்தில் கூலிக்கு அறை கொடுத்து அரைகுறையாக படமெடுத்த சந்தேகநபர் கைது!

கூலிக்கு தங்குவதற்கு அறை கொடுத்து அந்த அறையில் தங்குபவர்கள் புரியும் ஆபாச செயல்களை வீடியோ எடுத்துவந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்று வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தான் கூலிக்கு வழங்கும் அறையில் உள்ளவர்களின் ஆபாச செயல்களை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ செய்து வந்துள்ளார்.

இவ்வாறான சில வீடியோ காட்சிகள் இவருடைய கையடக்கத் தொலைபேசியில் இருந்ததை கண்டுபிடித்த அநுராதபுரம் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் இன்று அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

No comments:

Post a Comment