Monday, April, 09, 2012சென்னை::தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி (டி.ஏ.) 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்வர் ஜெயலலிதா 110வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 1-1-2012ம் ஆண்டு முதல் அகவிலைப்படி, 7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதேபோல தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அகவிலைப்படி பெறும் அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை தர ஊதியம் 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும். இது 1-1-2012 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும். அகவிலைப்படி பெறும் அனைத்து பணியாளர்களும் இதில் பயன்பெறுவார்கள். தமிழகத்தில் 18 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
No comments:
Post a Comment