Wednesday,April,04,2012இலங்கை::களுத்துறை, தொடங்கொடை, கதனகொட பிரதேசத்தில் ஒரு மாத பெண் சிசுவொன்றை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் 17 வயதான தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் எவரும் இல்லாத சந்தர்ப்பத்தில் குறித்த தாயினால் குழந்தை கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
பின்னர் அவர் கூக்குரலிடும் சத்தம் கேட்டு பிரதேசவாசிகள் சிசுவை மீட்டு நாகொடை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடங்கொடை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கராப்பிட்டிய மருத்துவ பீட மாணவர்கள் அறுவர் கைது!
காலி - கராப்பிட்டிய மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான மாணவர், தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மாணவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்றாம் வருட மாணவர்கள் சிலரே தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த மாணவரைத் தாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment