Wednesday,April,04,2012சுவீடன்::சுவீடன் நாட்டு வெளியுறவுகள் துறை அமைச்சர் கார்ல் பில்ட் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகிறது.
சுவீடனுக்கான இலங்கையின் தூதுவர் ஒசாடி அழகப்பெருமவை நேற்று தமது காரியாலயத்தில் சந்தித்த போது, அவர் இதற்கான விருப்பத்தை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது, இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக அமுலாக்க வேண்டும் என சுவீடன் தெரிவித்துள்ளது.
வட மாகாணத்திற்கு மாத்திரம் இன்றி, கிழக்கு மாகாணத்திலும் மீளமைப்பு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், இது தொடர்பான பணிகள் தற்போது இடம்பெறுவதாகவும் இலங்கை தூதுவர் சுவீடன் வெளியுறவு அமைச்சருக்கு விளக்கமளித்துள்ளார்.
No comments:
Post a Comment