
Wednesday,April,04,2012சென்னை::ஐபிஎல் 5வது சீசன் தொடக்கவிழா நேற்று சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்டமாக நடந்தது. டிக்கெட் விலை ரூ.1500 என்றபோதிலும் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கலைநிகழ்ச்சியை காண்பதற்காக குவிந்திருந்தனர். லேசர் ஒளிவிளக்குகள் பலவண்ண ஜாலங்களை காட்டியது. அமிதாப்பச்சன் கவிதைபாடி விழாவை துவக்கி வைத்தார். நான் மீண்டும் பிறந்தால் என்ற தலைப்பில் அவர் கவிதை வாசித்தார். அதைத்தொடர்ந்து டிரம்ஸ் இசை, கலோனியல் கசின்ஸ், ஹரிகரன், லெஸி ஆகியோர் கலக்கலாக பாடி அதிர வைத்தனர்.
டான், காமினி பாடல்களுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா நடனமாடினார். அவரைத்தொடர்ந்து பிரபுதேவா முக்காலா முக்காபுலா, சக்கரவள்ளியே, வான்டட் பாடல்களுக்கு ஆடினார். தொடர்ந்து 5வது சீசனில் பங்கேற்க உள்ள 9 அணி கேப்டன்களும் கிரிக்கெட் நெறிக்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர். கரீனாகபூர் ராஒன் பாடலுக்கு ஆடினார். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த கலை நிகழ்ச்சியின் இறுதிக்கட்டமாக சல்மான்கான் மற்றும் கேட்டி பெர்ரி கலக்கல் நடனம் இடம்பெற்றது. கேட்டி பெர்ரி கவர்ச்சி உடையில் வந்து கிறங்கடித்தார். சென்னை வீரர் போலிங்கருடன் அவர் போட்ட ஆட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது...
முதல் வெற்றியை ருசிப்பது யார்?
சென்னை::ஐபிஎல் திருவிழாவின் முதல் ஆட்டம் இன்று நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை, மும்பை அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டத்தில் அனல்பறக்கும். சென்னை அணி ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் இந்த சீசனை எதிர்கொள்கிறது. முரளி விஜயுடன் தொடக்கவீரராக அனிருத்தா அல்லது அஸ்வின் களமிறங்க கூடும். மிடில் ஆர்டரில் ரெய்னா, பத்ரிநாத், பிராவோ, ஜார்ஜ்பெய்லி வலுசேர்ப்பார்கள். அதிரடியில் மிரட்ட டோனி ரெடியாக உள்ளார். வேகப்பந்துவீச்சில் போலிங்கர், மோர்க்கல் நம்பிக்கை அளிப்பார்கள். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், ஜகதி, ஜடேஜா கூட்டணி சவால் கொடுக்கும்.
மும்பை அணி ஹர்பஜன்சிங் தலைமையில் களமிறங்குகிறது. இதனால் சச்சின் நெருக்கடி இல்லாமல் ஆடுவார். அவருடன் ஓபனிங்கில் மிரட்ட அதிரடி வீரர் லெவி தயாராக உள்ளார். தென் ஆப்ரிக்க வீரரான இவர் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 2020ல் 44 பந்தில் சதம் விளாசியிருந்தார். ரோகித்சர்மா, பொல்லார்டு ஆகியோரும் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். அம்பாதிராயுடு, பிளிஸ்ஸார்டு, ஜேக்கப்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்க கூடியவர்கள். பந்துவீச்சில் மலிங்காவின் யார்க்கர் சென்னை அணி வீரர்களுக்கு சவாலாக இருக்கும். பிராங்க்ளின், முனாப்படேல் ஆகியோரும் வலுசேர்ப்பார்கள். சுழற்பந்து வீச்சில் ஓஜா, ராபின்பீட்டர்சன் நம்பிக்கை அளிக்ககூடும்.
No comments:
Post a Comment