Pages

Friday, April 6, 2012

சட்டவிரோத ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் பிரான்ஸில் கைது!

Friday, April, 06, 2012
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் n;தாடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.வீ. சன் சீ கப்பலில் பயணித்த புகலிடக் கோரிக்கையாளர்களை கடனாவிற்கு அழைத்துச் சென்ற பிரதான சூத்திரதாரியாக குறித்த நபர் கருதப்படுகின்றார். தயாகரன் மார்கண்டு என்ற சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் பிரான்ஸிலிருந்து, கனடாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார். கனேடிய அரசாங்கத்தின் சார்பில் கடமையாற்றிய இன்டர்போல் அதிகாரிகளும், பிரான்ஸ் காவல்துறையினரும் கூட்டாக இணைந்து தயாகரனை கைது செய்துள்ளனர்.

2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 492 பேர் அடங்கிய புகலிடக் கோரிக்கையாளர் குழுவொன்றை கனடாவிற்கு எம்.வீ. சன் சீ என்ற கப்பல் மூலம் அனுப்பி வைத்த சம்பவத்தின் பின்னணியில் தயாகரனுக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தயாகரனை கைது செய்த உத்தியோகத்தர்களுக்கு கனேடிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் மற்றும் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனி ஆகியோர் உடனடியாக வாழ்த்து செய்திகளை அனுப்பி வைத்துள்ளனர்.

புதியவர்களை கனடா எப்போதும் வரவேற்கும் என்ற போதிலும் நிதியியல் நன்மைகளுக்காக குடிவரவு குடியகழ்வுச் சட்டங்களை மீறிச் செயற்படுவோரை அனுமதிக்க முடியாது என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தயாகரன் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை ஈடுபட்டதாக கனேடிய அதிகாரிகள் இந்த மார்ச் மாதம் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment