Pages

Friday, April 6, 2012

சென்னையில் மசாஜ் கிளப்புகளில் அதிரடி சோதனை: 3 பெண்கள் கைது!

Friday, April, 06, 2012
சென்னை::சென்னையில் மசாஜ் கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தி, விபசாரத்தில் தள்ளப்பட்ட அழகிய இளம்பெண்களை போலீசார் மீட்டனர். 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் விபசார தடுப்பு போலீஸ் உதவி கமிஷனர் கிங்ஸ்லின், இன்ஸ்பெக்டர்கள் சாண்டியாகோ, ஹரிஹரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை வேட்டை நடத்தினார்கள்.

சேத்துப்பட்டில் உள்ள மசாஜ் கிளப், மாங்காட்டில் உள்ள மசாஜ் சென்டர் ஒன்றிலும் இந்த சோதனை வேட்டை நடந்தது. கார்களிலும் விபசாரம் நடப்பதை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்த சோதனை வேட்டையில் விபசாரத்தில் தள்ளப்பட்ட ஏராளமான இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். சுஜாதா, மாலா, அம்பிகா என்ற 3 பெண்களும், வெங்கடசுப்பையா, பாண்டுரங்கா, வெங்கடநாராயணன் ஆகியோரும் கைதானார்கள்.

விபசாரத்துக்கு பயன்பட்ட சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment