Pages

Friday, April 6, 2012

மட்டக்களப்பில் மகாத்மா காந்தி மற்றும் வேடன்பவுளின் சிலைகள் உடைப்பு!

Friday, April, 06, 2012
இலங்கை::மட்டக்களப்பு நகரிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை, மற்றும் சாரணிய கழக இஸ்த்தாபகர் வேடன்பவுள் உருச்சிலை ஆகிய உருவச்சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று (5.4.2012) அதிகாலை இவ் உருவச்சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு நகரில் மிகவும் நீண்ட காலமாக இருந்து வந்த இந்த இரண்டு சிலைகளும் இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முகாத்மா காந்தியின் உருவச்சிலை இருக்கமிடத்திலிருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் வேடன்பவுள் சிலை உள்ளது.

இந்த இரண்டு உருவச்சிலைகளும் உடைக்கப்பட்டுள்ளது தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரட்ன உட்பட இராணுவ பொலிஸ் அதிகாரிகள் இவ்விடத்திற்கு விரைந்து ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்திவருகின்றனர்.

No comments:

Post a Comment