Friday, April, 06, 2012இலங்கை::ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட யோசனையை நிறைவேற்றுவதா?.இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் தனித்து தீர்மானிக்க முடியாது எனவும் அரசாங்கம் உடனடியாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றுக்கு செல்ல வேண்டும் எனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மக்களின் நிலைப்பாடுகளை அறியாமல் அந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவது, நாட்டை காட்டிக்கொடுப்பது மாத்திரமல்ல, அடிப்பணிவதற்கான ஆரம்பத்தின் அடையாளம் எனவும் அவர் தெரிவித்துள்ளாhர்.
ஜெனிவா யோசனைகளை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை இறுதியில்,லிபியாவுக்கு நேர்ந்த கதியை எதிர்நோக்க நேரிடுவது கட்டாயம் என கூறியுள்ள அமரசேகர, அவ்வாறான நிலைக்கு நாட்டை இட்டுச் செல்லாது தடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மனித உரிமை பேரவையின் அறிக்கை ஆகியவற்றை சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகளில் சூழ்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒன்றுடன் ஒன்று சமநிலைப்படுத்த முடியாது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் அமுல்படுத்த கூடிய பரிந்துரைகள் இருக்குமாயின் அரசாங்கம் அதனை அமுல்படுத்தலாம். எனினும் மக்களின் விருப்பத்தை அறியாது, மனித உரிமை பேரவையின் யோசனையை அமுல்படுத்த முடியாது எனவும் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.
No comments:
Post a Comment